Friday, December 25, 2015

நாந்தி ஸ்ராத்தம்

வாழ்ந்து மறைந்த மூன்று தலைமுறையை சேர்ந்த பிதா (தந்தை), பிதாமஹர் (தந்தையின் தந்தை), ப்ரபிதாமஹர் (அவரின் தந்தை), அவ்ர்களின் மனைவிகள் மற்றும்

மாதா மஹர் (தாயின் அப்பா), மாதுர் பிதாமஹர் (அவரின் அப்பா), மாதுர் ப்ரபிதாமஹர் (அவரின் அப்பா), மாதாமஹி (அவர்களின் மனைவிகள்)

முதலிய ஆறு முன்னோர்களும் நாந்தீ சோபன பித்ருக்கள் எனப்பெயர்.

இவர்கள் நமது வீட்டில் திருமணம் உபநயனம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும்போது ஒரு சில நாட்கள் முன்னதாகவே நம்முடைய இருப்பிடத்திற்கு ஸந்தோஷத்துடன் ஆசி கூற, அவர்களாகவே வருகிறார்கள்.

அவர்களுக்கு நல்ல வஸ்திரம் (வேஷ்டி), தந்து, நல்ல சாப்பாடு போட்டு, சந்தோஷப்படுத்தி, அவர்களின் ஆசியைப் பெறும் செயல்தான் நாந்தி. இதைக் கட்டாயம் செய்ய வேண்டும். இதைச் செய்வதால் முன்னோர்களின் அனுக்ரஹம் கிட்டும்.


இதை ஹோமத்துடன் மற்ற ச்ராத்தங்களைப் போல பார்வணமாக செய்யலாம். அல்லது, ஹோமம் இல்லாமல் அரிசி, வாழைக்காய் முதலியன தந்து ஹிரண்யமாகசெய்யலாம். ஆனால்கண்டிப்பாக நாந்தீ செய்ய வேண்டும்

25th Dec 2015