General Information
1. Varalakshmi நோம்பு எடுத்து வைத்தல்
* On the year of marriage no need to see the month of Noombu
* Other Years -- Only in the month of Aavani
2. Varalakshmi நோம்பு பண்ணுவது -- after someone's death in family
-- Direct தலைமுறை -- பண்ண கூடாது (1st Generation)
-- Next தலைமுறை -- பண்ண கூடாது (2nd Generation)
-- Next தலைமுறை (3rd generation) பண்ண Conditions as follows
* அயனம் changed OR Tamil Year Changed after death OR
* After 6 months AND completion of any one marriage in the family
3. பூஜைக்கு தேவையான அம்மன் முகம், (வெள்ளி) சொம்பு மற்றவை பெண்ணின் பெற்றோர்கள் வாங்கி தரவேண்டும்.
4. யார் பூஜை செய்ய போகிறார்களோ, அவர்களுடைய அம்மன் முகங்கள் மட்டும் கலசத்தில் வைக்க வேண்டும்
5. ஒரு வீட்டில் ஒரு கலசம் மட்டுமே வைக்க வேண்டும்
6. ஒரு வீட்டில் 4 மருமகள்கள் பூஜை செய்ய வேண்டும் என்றால், 4 முகங்களையும் ஒரே கலசத்தில் வைக்கவேண்டும்
7. ஏதாவது காரணத்தால் நம் ஆத்தில் பூஜை இல்லா விட்டால், அம்மன் முகத்தை வேறு ஆத்து கலசத்தில் வைக்க கூடாது. வேறு ஆத்து பூஜையில் சாதாரணமாக கலந்து கொண்டு பூஜை செய்ய வேண்டும்
ஏற்பாடுகள்
- Clean and keep ready the following : வெள்ளி சொம்பு, அம்மன் முகம், பஞ்ச பாத்திரம், பூஜை சாமான்கள்
- Keep ready நகைகள், அலங்கார சாமான்கள் for அம்மன்
- If possible draw Amman on the wall behind the mandapan.
- மண்டபம் decoration with colour paper, lights etc
- மாவிலை தோரணம், வாழை கன்று etc
- தொடுத்த பூ, உதிரி பூ (1kg), தாமரை பூ, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய்
- ஊதுபத்தி, கல்பூரம், தீபம், சாம்பிராணி,விளக்கு, எண்ணெய், சந்தனம், குங்குமம், நுனி வாழை இலை, ரவிக்கை துணி, பஞ்சு வஸ்திரம், திரி,அக்ஷதை.
- கலசத்தில் வைக்க தேங்காய், பிச்சோலை, கருகமணி, கல்கண்டு, கஜூர் காய், எலுமிச்சை பழம், அரிசி, வெல்லம்,து.பருப்பு, ஏலம்
- நோம்பு சரடு, திருமாங்கல்ய சரடு (If needed), ஸ்வர்ண புஷ்பம் (If available)
- பஞ்சாங்கம் to know Star, Thithi, Year etc for doing sangalpam
- பூஜை பண்ணி வைக்க வாத்தியார் / Cassette / CD
Procedure
Thursday (Day before Poojai day) Morning
- தலைக்கு மடியாக குளித்து விட்டு, வெள்ளி சொம்பில் வெற்றிலை, பாக்கு, கல்கண்டு, கஜூர் காய்,ஏலம்,எலுமிச்சை பழம், அரிசி, வெல்லம், து.பருப்பு, சில்லறை ஆகியவற்றை போடவும்
- மஞ்சள் தடவிய தேங்காயை மேலே வைக்கவும்
- சொம்பிற்கும் தேங்காய்க்கும் நடுவே மாவிலை கொத்தை வைக்கவும்
- சொம்பு மற்றும் தேங்காய்க்கு சந்தனம், குங்குமம் இடவும்
- அம்மன் முகத்தை சொம்பின் வெளியில் சொருகி வைக்கவும்
- பிச்சோலை, கருகமணியை அம்மனுக்கு காது பக்கத்தில் வைக்கவும்
- அம்மனுக்கு நகைகள் போட்டு அலங்கரிக்கவும்
- அம்மனை பூஜை அறையில் வைக்கவும்
- வேண்டுமானால் திருமாங்கல்ய சரடு மாற்றிக்கொள்ளவும்
- வாசலில் மாவிலை தோரணம் கட்டவும்
Thursday (Day before Poojai day) Evening
- மஞ்சள் பொங்கல் (து.பருப்பு போட்டு), வடாம் பொரித்து அம்மனுக்கு நைவேத்யம் செய்யவும்.
- அம்மனுக்கு பாட்டு பாடவும்
- கல்பூரம் ஏற்றவும்
- Make mandapam ready with decorations, lighting etc.
- If needed and possible you can keep mirror, other Amman photos inside mandapam
Friday
- மண்டபத்தின் உள்ளேயும் வெளியிலும் மா கோலம் போடவும்
- கோலத்தின் மேல் மணை வைத்து அதன் மேலும் மா கோலம் போடவும்
- மணை மேல் வாழை இலை போடவும்
- ஜாக்கிரதையாக அம்மனை எடுத்து வந்து மண்டபத்தில் இலை மேல் வைக்கவும் (If needed support you can keep பேலா filled with rice below சொம்பு)
- சரட்டில் மஞ்சள், பூ கட்டி, பூஜையில் வைக்கவும்
- Without keeping Amman to wait in the mandapam, start poojai immediately.
- After Poojai, கணவர் / பெரியவர் கொண்டு வலது கையில் சரட்டை கட்டிக்கொள்ளவும். (உள்ளங்கையில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் வைத்துக்கொண்டு கிழக்கு பார்த்து உட்கார்ந்து கட்டிக்கொள்ளவும்)
- Keep ஆரத்தி in front of Amman.
- அம்மனுக்கு பாட்டு பாடவும்
Evening
- சுமங்கலிகளை ஆத்துக்கு அழைத்து, வெற்றிலை, பாக்கு, பழம் கொடுக்கவும்
- பாட்டு பாடவும்
- இரவு படுப்பதற்கு முன் கல்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்கவும்
Saturday (Day after Poojai) Morning
- அம்மனுக்கு புனர் பூஜை செய்யவும்
- வெற்றிலை, பாக்கு, பழம்,தேங்காய் நைவேத்யம் செய்து கல்பூரம் ஏற்றவும்.
Evening
- மாலை கடலை பருப்பு சுண்டல் செய்து நைவேத்யம் செய்யவும்
Night
- பால் நைவேத்யம் செய்யவும்
- கல்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்கவும்
- அம்மனை கலசத்துடன் எடுத்து அரிசி பானைக்குள் வைத்து மூடி வைக்கவும்.
After one week (Next Friday), takeout Amman and can keep inside. Use rice and other things in the Kalasam to prepare Pongal etc.
சமையல்
- பருப்பு பாயசம்
- சாம்பார்
- ரசம்
- கறி
- பச்சரிசி இட்லி
- கொழுகட்டை(2 to 4 விதம்)
- மெது வடை
- கொத்துகடலை சுண்டல்
***************************************
Vasu
2nd Aug 2012